தோனிக்கு இந்த பழக்கம் உண்டா...? வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
கையில் பேட்டுடன் இருக்கும் அவர் நிச்சயம் ஒரு திட்டத்துடனேயே இருக்கிறார் என நீங்கள் நம்பலாம் என்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். போட்டியின்போது, இக்கட்டான சூழலிலும் அமைதியாக இருந்து, அதிரடியாக விளையாடி அணி வெற்றி பெற உறுதுணையாக செயல்படுபவர். இதேபோன்று, நிருபர் கேட்க கூடிய எல்லாவித கேள்விகளுக்கும் கோபம் கொள்ளாமல் புன்னகைத்தபடி பதிலளிக்க கூடியவர்.
இதனால், பல்வேறு வயதினரும் அவருக்கு ரசிகர், ரசிகைகளாக உள்ளனர். இந்நிலையில், அவரை பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தோனி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஹூக்கா புகைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் ஒருவர், ஏன் ஒவ்வொருவரும் இதனை பெரிய விவகாரம் ஆக்குகின்றனர்? தல புகைப்பது என்பது இது முதல்முறையல்ல. அதனை பலமுறை நாங்கள் பார்த்திருக்கிறோம் என தெரிவித்து உள்ளார். மற்றொருவர், விளம்பர படப்பிடிப்பிற்காக தோனி ஹூக்கா புகைக்கிறார் என்றும், இதனை நம்ப முடியவில்லை, இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். வேறொருவர், ஹூக்காவில் புகையிலை இல்லை என்று கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில், மூத்த மற்றும் இளம் வீரர்களுக்கு இடையேயான தடைகளை உடைப்பதற்காக இதுபோன்ற ஹூக்கா விருந்து நிகழ்ச்சிகளை தோனி நடத்துவது வழக்கம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் டி20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
தோனியிடம் இருந்து நான் கற்று கொண்ட சிறந்த விசயம் என்றால், எந்த சூழலிலும் அமைதியாக இருக்கும் திறன். அது அணியை அமைதிப்படுத்துவதற்கான தாக்கமும் கொண்டிருக்கும். பல்வேறு தருணங்களில், அமளி, கூச்சல் ஏற்படும்போது மற்றும் போட்டியின்போது என்ன நடந்தாலும், அவரை பார்த்தால், மிக அமைதியாக காணப்படுவார்.
கையில் பேட்டுடன் இருக்கும் அவர் நிச்சயம் ஒரு திட்டத்துடனேயே இருக்கிறார் என நீங்கள் நம்பலாம் என்று கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2009 முதல் 2012-ம் ஆண்டு காலகட்டத்தில் தோனியின் தலைமையின் கீழ் பெய்லி விளையாடி இருக்கிறார்.