உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை விரும்பவில்லை- பட்லர்


உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை விரும்பவில்லை- பட்லர்
x

Image Courtesy: AFP 

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப் 1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப் 2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது:-

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் சிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். எங்களுக்கு ரசிகர்களின் மகத்தான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார்.


Next Story