சுழல் ஆடுகளங்களில் இந்திய அணிக்கு இங்கிலாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளது - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்


சுழல் ஆடுகளங்களில் இந்திய அணிக்கு இங்கிலாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளது -  இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
x

Image Courtesy: AFP

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து சுழல் ஆடுகளங்களில் இந்திய அணிக்கு இங்கிலாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்காதது அவர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்தது. ஆனால், அவர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி இருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்கலாம்.

இந்திய அணி இதுபோன்ற தோல்விகளில் இருந்து மீண்டு வந்துள்ளது. இதை கடந்த கால வரலாறுகளில் இருந்து காணலாம். அதனால் அடுத்தப் போட்டி இங்கிலாந்துக்கு சவாலானதாக இருக்கும். அதே சமயம் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் இங்கிலாந்தின் அதிரடி ஆட்ட அணுகுமுறை திறன்மிக்கதாக இருக்கும் என்ற எச்சரிக்கையை இந்திய அணிக்கு இங்கிலாந்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story