ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் - பாபர் அசாம் சாதனை


ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் - பாபர் அசாம் சாதனை
x

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து பாபர் அசாம் உலக சாதனை படைத்தார்.

கராச்சி,

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக கராச்சியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. தனது 18-வது சதத்தை அடித்த கேப்டன் பாபர் அசாம் 107 ரன்களில் (117 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

முன்னதாக பாபர் அசாம் 19 ரன் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். 99-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய பாபர் அசாம் 97 இன்னிங்சில் பேட்டிங் செய்து இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டும் சாதனையை தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லாவிடம் இருந்து தட்டிப்பறித்தார். அம்லா 2015-ம் ஆண்டில் தனது 101-வது இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக வலம் வரும் 28 வயதான பாபர் அசாம் மொத்தத்தில் 5 ஆயிரம் ரன்களை நிறைவு செய்த 14-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.


Next Story