முதல் டி20 போட்டி; லிட்டன் தாஸ் அபார பேட்டிங்...நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி...!


முதல் டி20 போட்டி; லிட்டன் தாஸ் அபார பேட்டிங்...நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி...!
x

Image Courtesy: @ICC

வங்காளதேச அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்தார்.

நேப்பியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வங்காளதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் நீஷம் 48 ரன்கள் அடித்தார். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வங்காளதேச அணி தரப்பில் இறுதிவரை களத்தில் நின்ற தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


Next Story