முதல் டி20 போட்டி; நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

Image Grab by Video Posted on @BLACKCAPS
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
வெல்லிங்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை வெல்லிங்டனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாகவும், நியூசிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக்கோப்பைக்கு இந்த தொடர் முன்னோட்டமாக பார்க்கபடுவதால் இரு அணிகளும் இந்த தொடரை வெல்ல கடுமையாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11.40 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






