பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவன் அறிவிப்பு..!


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவன் அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது. பாபர் ஆசம் ஒரு வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. கேப்டனாக பேட் கம்மின்ஸும், துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், இணை துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் விவரம்;

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் ஹேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.


Next Story