முதலாவது டெஸ்ட்; வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்!


முதலாவது டெஸ்ட்; வங்காளதேசம்  - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்!
x

image courtesy; AFP

50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடரை வெல்வதற்கு நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்காளதேச அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

அதே நேரத்தில் இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் நியூசிலாந்து அணி வெற்றிக்காக போராடும். எனவே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.


Next Story