பிசிசிஐ பதவியில் கங்குலி சிறப்பாக செயல்பட்டார்: பிசிசிஐ பொருளாளர் பேட்டி


பிசிசிஐ பதவியில் கங்குலி சிறப்பாக செயல்பட்டார்: பிசிசிஐ பொருளாளர் பேட்டி
x

கங்குலிக்கு எதிராக சில உறுப்பினர்கள் பேசியதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் அளித்த பேட்டியில், 'இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் சவுரவ் கங்குலி மிகச் சிறப்பாக செயல்பட்டார். கடினமான கொரோனா காலகட்டத்திலும் கிரிக்கெட் வாரியத்தை அவர் நடத்திய விதம் எங்கள் எல்லோருக்கும் திருப்திகரமாக இருந்தது.

அவருக்கு எதிராக சில உறுப்பினர்கள் பேசியதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. அவருக்கு எதிராக யாரும் பேசவில்லை' என்றார்.

1 More update

Next Story