பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு..!


பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு..!
x

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு,

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பெங்களூரு ஆட உள்ளது.

இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு-குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற அணி குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டி 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story