முக்கியமான போட்டிகளில் பேட்டிங், பந்து வீச்சில் பங்களிப்பதில் மகிழ்ச்சி - ஜடேஜா


முக்கியமான போட்டிகளில் பேட்டிங், பந்து வீச்சில் பங்களிப்பதில் மகிழ்ச்சி - ஜடேஜா
x

Image Courtacy: ANI

சிறப்பாக விளையாடி தனது 49 ஆவது சதத்தைப் பதிவு செய்த விராட் கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. விராட் கோலியின் 49வது ஒருநாள்போட்டி சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 5 விக்கெட்டுகளுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பெற்ற 8வது வெற்றி இதுவாகும்.

இந்நிலையில் முக்கியமான போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஒரு முக்கியமான போட்டியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்கினை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து முக்கியமான போட்டிகள் வரவிருக்கின்றன. எனது தனிப்பட்ட செயல்திறனில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இது விராட் கோலிக்கு ஸ்பெஷல் மற்றும் கடினமானது என்று நான் கூறுவேன். இந்த சதம் அவருக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனென்றால் மதியம் விக்கெட் சவாலாக இருந்தது, ஒரு நேரத்தில் 260-270 ரன்கள் எடுப்பதே சிரமமாக இருந்தது, அந்த நேரத்தில், ஸ்ட்ரைக் சுழற்றி பவுண்டரிகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது" என்று ஜடேஜா கூறினார்.

இதுவரை நடந்த போட்டியில், ஜடேஜா நான்கு இன்னிங்ஸ்களில் 55 க்கு மேல் சராசரியாக 111 ரன்கள் எடுத்துள்ளார், சிறந்த ஸ்கோர் 39*. 5/33 என்ற சிறந்த புள்ளிகளுடன் 17.35 சராசரியில் 14 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story