ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இவரை சேர்க்க வேண்டும் - அனில் கும்ப்ளே


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இவரை சேர்க்க வேண்டும் - அனில் கும்ப்ளே
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Oct 2023 2:42 AM GMT (Updated: 11 Oct 2023 2:49 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமியை சேர்க்க வேண்டும் என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை டெல்லியில் சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியை சேர்க்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணி ஷர்துல் தாக்கூரை பயன்படுத்தும் என தெரியும். ஆனால் நீங்கள் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கும் போது தாக்கூரை காட்டிலும் ஷமி சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் ஆப்கானிஸ்தானின் சிறந்த ஆட்டக்காரர் குர்ப்ராஸ். அவர் சிறந்த பார்மில் உள்ளார்.

எனவே குர்ப்ராஸ் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த வேண்டும் என்பதால் மூன்று தரம் வாய்ந்த தொடக்க பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். எனவே தாக்கூருக்கு பதிலாக ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.


Next Story