"தோனிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை" -முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளக்கம்


தோனிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை -முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளக்கம்
x

கோப்புப்படம் 

தனக்கும் தோனிக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததற்கு அப்போதைய கேப்டன் தோனிதான் காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

தனது ஓய்வை அறிவித்தபோது, மறைமுகமாக பலரை ஹர்பஜன் சிங் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள ஹர்பஜன், தானும் தோனியும் சிறந்த நண்பர்கள் என்று கூறி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் மீதே புகார் கூறி இருந்ததாகவும், தோனியுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஹர்பஜன் சிங் பேசி உள்ளார்.


Next Story