"இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும்" - வினி மேக்ஸ்வெல்


இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்
x

image courtesy; instagram/ vini.raman

தினத்தந்தி 21 Nov 2023 5:22 AM GMT (Updated: 21 Nov 2023 7:31 AM GMT)

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் வருத்தத்துடன் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். வினிராமன் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதைக் கண்ட பல இந்திய ரசிகர்கள் அவருக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் என வினி ராமன் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தியராக நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், உங்கள் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டியது முக்கியம். இந்த மாதிரி பேசுவதை விட்டு, உங்களது கோபத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினை மீது திருப்புங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story