ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசை...முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி...!


ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசை...முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி...!
x

Image Courtesy: @ICC

ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

துபாய்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது.

தற்போது வரை ஒருநாள் தொடரை 4-0 என முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன.

6 முதல் 10 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (101 புள்ளி), வங்கதேசம் (95 புள்ளி), இலங்கை (86 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (72 புள்ளி), ஆப்கானிஸ்தான் (71 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.Next Story