ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!


ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
x

image courtesy; ICC

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்தியாவை சேர்ந்த முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய முக்கிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வங்காளதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாடியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story