2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி அறிவிப்பு - பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்...!


2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி அறிவிப்பு - பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்...!
x

Image Tweeted By @ICC

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்தியராக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்த வகையில் ஐசிசி நேற்று 2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 2022ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற தூணாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஒரே ஒரு இந்திய வீரராக சமீபத்தில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவும், வெஸ்ட் இண்டீசின் க்ரெய்க் ப்ராத்வெய்ட்டும் உள்ளனர். தொடர்ந்து 3 முதல் 7 வரிசை இடங்களுக்கு மார்னஸ் லபுஸ்சாக்னே (ஆஸ்திரேலியா), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து),பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து, ரிஷப் பண்ட் (இந்தியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பந்துவீச்சாளர்களாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்சும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடாவும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி விவரம்:-

1. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா)

2. க்ரெய்க் ப்ராத்வெய்ட் (வெஸ்ட் இண்டீஸ்)

3. மார்னஸ் லபுஸ்சாக்னே (ஆஸ்திரேலியா)

4. பாபர் ஆசம் (பாகிஸ்தான்)

5. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)

6. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) (இங்கிலாந்து)

7. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) (இந்தியா)

8. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

9. காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)

10. நாதன் லயன் (ஆஸ்திரேலியா)

11. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)


Next Story