இந்தியா-நியூசிலாந்துக்கு ஒரு நாள் கிரிக்கெட்; ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான அவுட்


இந்தியா-நியூசிலாந்துக்கு ஒரு நாள் கிரிக்கெட்; ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான அவுட்
x

Image Courtesy : @BCCI twitter

இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னில், டேரில் மிட்செலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத்,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி திரில் 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னில், டேரில் மிட்செலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் வீசிய பந்தை பாண்ட்யா எதிர்கொண்ட போது விக்கெட் கீப்பர் டாம் லாதம் கையுறையை ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சுக்கு நெருக்கமாக கொண்டு வந்து பிடிக்க முயற்சித்தார். பந்து அதை கடந்த போது பெய்ல்ஸ் சரிந்தது.

ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து பெய்ல்சை தாக்கவில்லை. அவரது கையுறை பட்டதால் தான் கீழே விழுந்தது என்பது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் 3-வது நடுவர் அவுட் வழங்கி விட்டார். இதனால் ஒரு கனம் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஹர்திக் பாண்ட்யா அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார்.


Next Story