ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகும் இந்திய பேட்ஸ்மேன்...? - ரசிகர்கள் கவலை...!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17 தேதி தொடங்க உள்ளது.
அகமதாபாத்,
ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்தியா ஆடி வருகிறது. ஆனால் இன்னும் ஒரு நாளே இருப்பதால் இந்த போட்டியில் முடிவு கிடைக்குமா என சந்தேகம் நிலவுகிறது.இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டிக்கு மட்டும் இந்தியாவின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய போட்டிகளுக்கு ரோகித் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் ஒருநாள் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெற்றிருந்த அய்யருக்கு 3ம் நாள் ஆட்டத்தின் போது முதுகு வலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் ஸ்கேன் எடுக்கச் சென்றார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருகிறது. அதனால் இந்திய அணி பேட்டிங் ஆடும் போது அவர் களம் இறங்கவில்லை.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறுவாரா? இல்லையா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்த வருடம் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் வீரர்களின் உடற்தகுதியை மிகவும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
எனவே ஸ்ரேய்ஸ் அய்யரின் உட்ற்தகுதியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயஸ் அய்யருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.