ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் இத்தனை கோடியா..?

image courtesy: AFP
கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்றது.
மும்பை,
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை உச்சி முகர்ந்தது.
இருப்பினும் இந்த தொடரால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பலன் கிட்டியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த வகையில் வெளியான அறிக்கையின் படி, கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் மூலம் இந்தியாவுக்கு மட்டும் ரூ.11,637 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






