'பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐ.பி.எல். அனுபவம் உதவியது'- இந்திய பந்துவீச்சாளர் பும்ரா


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐ.பி.எல். அனுபவம் உதவியது- இந்திய பந்துவீச்சாளர் பும்ரா
x

ஐ.பி.எல். மூலம் பேட்டிங்குக்கு உகந்த மைதானத்தில் எப்படி சிறப்பாக பந்துவீசுவது என்ற அனுபவம் கிடைத்ததாக பும்ரா கூறினார்.

ஆமதாபாத்,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் 19 ரன்னுக்கு 2 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறுகையில், 'பேட்டிங்குக்கு உகந்த மைதானத்தில் எப்படி சிறப்பாக பந்துவீசுவது என்பதை எனது ஐ.பி.எல். அனுபவத்தை பயன்படுத்தி முயற்சித்தேன்.

கடந்த 11 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அது உதவிகரமாக இருந்தது. மேலும், ஆமதாபாத் எனது சொந்த ஊர். இங்கு நிறைய ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளேன். அந்த அனுபவமும் கைகொடுத்தது' என்றார்.


Next Story