ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி


ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி
x

குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத்தில் தொடங்கிய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். அகர்வால் 16 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து ஹெட் , அபிஷேக் ஷர்மா இருவரும் அதிரடி காட்டினர் . அணியின் ஸ்கோர் 58ரன்னாக இருந்த போது ஹெட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 29 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் , கிளாசன் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.ஆனாலும் கிளாசன் 24 ரன்களும் , மார்க்ரம் 17 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்துல் சமத் அதிரடி காட்டி 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசி மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 163ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக சாஹா , கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் சாஹா 25 ரன்களுக்கு வெளியேறினார்.தொடர்ந்து கில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் சாய் சுதர்சன் , டேவிட் மில்லர் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 36 பந்துகளில் 45 ரன்களும் , மில்லர் 27 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.


Next Story