ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

குஜராத் :

விருத்திமான் சாஹா, கில் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோகித் சர்மா, தர்ஷன் நல்கண்டே.

ஐதராபாத்:

மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட் , அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன் ), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

1 More update

Next Story