ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள்... விராட் கோலி சாதனை


ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள்... விராட் கோலி சாதனை
x

. விராட் கோலி பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள் (241) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் .

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , முதலில் பேட்டிங் செய்த.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 182ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடி விராட் கோலி 59பந்துகளில் 83ரன்கள் (4 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தார்.

இந்த போட்டியில் 4 சிக்ஸ் அடித்ததால் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார் . அதன்படி பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள் (241) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் .

பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் (239) 2வது இடத்திலும் , ஏபி டிவில்லியர்ஸ் (238) 3வது இடத்திலும் உள்ளனர்.


Next Story