ஐ.பி.எல். தொடர்; லக்னோ அணியின் கேப்டன், துணை கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு


ஐ.பி.எல். தொடர்; லக்னோ அணியின் கேப்டன், துணை கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு
x

image courtesy; PTI

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது.

லக்னோ,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் கே.எல்.ராகுல் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story