ஐ.பி.எல்; மும்பை அணிக்காக அதிக சதங்கள்...ரோகித் சர்மாவை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்


ஐ.பி.எல்; மும்பை அணிக்காக அதிக சதங்கள்...ரோகித் சர்மாவை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
x

Image Courtesy: AFP 

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை அணிக்காக தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.

மும்பை அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்;

ரோகித் சர்மா - 2 சதம்

சூர்யகுமார் யாதவ் - 2 சதம்

சச்சின் டெண்டுல்கர் - 1 சதம்

சனத் ஜெயசூர்யா - 1 சதம்

லெண்டல் சிம்மன்ஸ் - 1 சதம்

கேமரூன் க்ரீன் - 1 சதம்


Next Story