ஐ.பி.எல்.: இம்முறை கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் -முன்னாள் சி.எஸ்.கே. வீரர் கணிப்பு


ஐ.பி.எல்.: இம்முறை கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் -முன்னாள் சி.எஸ்.கே. வீரர் கணிப்பு
x

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணி குறித்து அல்பி மோர்கல், தனது கருத்தை கூறியுள்ளார்.

கேப்டவுன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை 3-வது இடத்தில் உள்ளது.

இதனிடையே இந்த முறை கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரை அனைத்து அணிகளுமே சம பலத்துடன் மல்லுக்கட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்த முறை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அல்பி மோர்கல் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மற்ற சீசன்களை விட இம்முறை அனைத்து அணிகளுமே அபாயகரமானதாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த தொடர் பல சவால்களை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் கம்பேக் கொடுப்பார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்று எனக்கு தோன்றுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story