இது 300 ரன்கள் குவிக்க கூடிய ஆடுகளம் அல்ல, ஆனால்... - தோல்வி குறித்து ஷகிப் கருத்து


இது 300 ரன்கள் குவிக்க கூடிய ஆடுகளம் அல்ல, ஆனால்... - தோல்வி குறித்து ஷகிப் கருத்து
x

Image Courtesy: @BCBtigers

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் தோல்வி அடைந்தது.

பல்லகெலெ,

ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 30ம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை வீழ்த்தியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - இலங்கை அணிகள் பல்லகெலெவில் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அசலங்கா 62 ரன்கள் எடுத்தார்.

இந்த தோல்விக்கு பின்னர் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது,

இது 300 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளம் அல்ல. ஆனால் 220-230 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். மூத்த வீரர்கள் (லிட்டன் தாஸ், தமிம் இக்பால்) இல்லாத நிலையில் எனக்கு பொறுப்பு அதிகம். அதை செய்ய தவறிவிட்டேன். மொத்தத்தில் ஒரு பேட்டிங் குழுவாக நன்றாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story