கபடி கபடி....பாகிஸ்தான் வீரரை கலாய்த்த ஷிகர் தவான்


கபடி கபடி....பாகிஸ்தான் வீரரை கலாய்த்த ஷிகர் தவான்
x

image courtesy; AFP

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3-வது டி20 போட்டியில் வேடிக்கையான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

வெலிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது.

முன்னதாக இந்த தொடரின் 3-வது போட்டியில் வேடிக்கையான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஒடினார். அப்போது அவர் தடுமாறி கையிலிருந்த பேட்டை தவற விட்டு விட்டு தன்னுடைய கையால் கிரீஸ் கோட்டை தொட்டு 2 ரன்கள் எடுத்தார். ஆனால் டிவி ரீப்ளேயில் அவர் சரியாக கிரீஸ் கோட்டை தொடவில்லை என தெரியவந்தது. இதனால் ஷார்ட் ரன் முறையில் ஒரு ரன் குறைக்கப்பட்டது.

கீரிஸ் கோட்டை கை விரல்களால் ரிஸ்வான் தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அதனை தனது எக்ஸ் பக்கத்தில் 'கபடி கபடி கபடி' என்ற தலைப்புடன் ரிஸ்வானை கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

1 More update

Next Story