இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்...!


இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்...!
x
தினத்தந்தி 21 Nov 2022 7:27 AM GMT (Updated: 21 Nov 2022 9:37 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை மருத்துவரை சந்திப்பதற்காக வில்லியம்சனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story