கில் அதிரடி சதம்: குஜராத் 233 ரன்கள் குவிப்பு...இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்...?


கில் அதிரடி சதம்: குஜராத் 233 ரன்கள் குவிப்பு...இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்...?
x

Image Courtesy: @IPL 

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 233 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத்,

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதி சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஆடி வருகின்றன. டாஸ் போடுவதற்கு முன்னர் ஆட்டம் சிறிது நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சஹா 18 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய கில் மத்வால், சாவ்லா பந்துவீச்சில் சிக்சர்களை அடித்து நொறுக்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது 3வது சதம் இதுவாகும். அதம் அடித்த பின்னரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்லால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

மறுபுறம் சாய் சுதர்சனும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்து மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சுப்மன் கில் 60 பந்தில் 129 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து பாண்ட்யா களம் இறங்கினார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.


Next Story