ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெற்றிபெற கோலி அதிக ரன் எடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங் கருத்து


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெற்றிபெற கோலி அதிக ரன் எடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங் கருத்து
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா வெற்றிபெற விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும். 2012-ம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி உள்ளூரில் தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டி தொடர்களை வென்று வீறுநடை போடுகிறது.

இந்த நிலையில், இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு விராட் கோலி மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்து உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் முக்கிய வீரராக திகழ்வார் என்றும், அவர் சிறப்பாக பந்துவீசினால், இந்திய அணி கட்டாயம் தொடரை வெல்லும் என்றும் ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அதேபோல, மற்றொரு முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா வெற்றிபெற வேண்டுமானால், விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்து நிரூபித்துள்ள விராட் கோலி, டெஸ்ட் போட்டியிலும் சதங்களை குவிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story