பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ; ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் லெவன் அறிவிப்பு


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ; ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் லெவன் அறிவிப்பு
x

image courtesy; ICC

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதால் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் லெவனை கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். அந்த அணியில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றிருந்த வீரர்களே மாற்றமின்றி தொடருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலேக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்


Next Story