கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!


கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 3 July 2023 10:15 AM GMT (Updated: 3 July 2023 1:40 PM GMT)

ஆஷஸ் தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் எஞ்சிய 3 போட்டிகளுக்கா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது.

அந்த அணியில் கடந்த டெஸ்ட் போட்டியில் காயமடைந்த நாதன் லயன் இடம் பெறவில்லை.

எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மைக்கேல் நசீர், ஜிம்மி பெய்ர்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.




Next Story