ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் சொதப்பினாலும் (முதல் இரு டெஸ்டில் 38 ரன் எடுத்துள்ளார்) அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை. கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீரர்களின் பட்டியலில், துணை கேப்டன் என்று எந்த வீரரின் பெயரும் குறிப்பிடபடவில்லை.

கடைசி இரு டெஸ்டுக்கான இந்திய அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே. எஸ்.பரத், இஷான் கிஷன், அஸ்வின், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி மும்பை வான்கடேயில் நடக்கிறது.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடமாட்டார். அந்த ஆட்டத்தில் அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துவார். வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்குர், அக்ஷர் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட்.


Next Story