சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான நேரடி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன


சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான நேரடி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன
x

சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

ரசிகர்கள் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர். பெண்கள் தனி வரிசையில் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர்.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வழங்கப்பட்டு வந்த நேரடி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது. டிக்கெட் வழங்கப்பட்ட 2.30 மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தன.

மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.


Next Story