உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!


உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!
x

image courtesy: BCCI twitter

தினத்தந்தி 15 Nov 2023 11:29 AM GMT (Updated: 15 Nov 2023 11:30 AM GMT)

கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

மும்பை,

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 673 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி (674*) ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சச்சின் (673) சாதனையை முறியடித்தார்.

மேலும் விராட் கோலி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 7 முறை 50+ ரன்கள் அடித்த சச்சின் (2003), ஷகிப் அல் ஹசன் (2019) ஆகியோரின் சாதனையை முறியடித்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் 8-வது முறையாக 50+ ரன்களை கடந்து விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.


Next Story