நாக்பூர் டெஸ்ட்: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 76-2
ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழந்துள்ள நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நாக்பூர்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்கிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.