பும்ரா, பண்ட், ராகுல் உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ வெளியிட்ட புதிய தகவல்...!


பும்ரா, பண்ட், ராகுல் உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ வெளியிட்ட புதிய தகவல்...!
x

கோப்புப்படம்

பும்ரா, பண்ட், ராகுல் உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது இந்திய அணி. ஆனால் இந்திய அணியால் 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையும் வெல்ல முடியவில்லை. இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது முதன்மை காரணமாக அமைந்தது.

ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும் அணியின் முன்னணி வீரர்களான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியது, ஸ்ரேயஸ் அய்யர் காயம், கே.எல்.ராகுல் காயம் ஆகியவை இந்திய அணியின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மிக முக்கிய இந்த வீரர்களின் காயம் குறித்த அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,

பிரசித் கிருஷ்ணா மற்றும் பும்ரா காயத்திலிருந்து குணமடையும் பகுதியின் கடைசி பாகத்தை தொட்டு வலைப்பயிற்சிகளில் விளையாடி வருகின்றனர். அவர்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் பிசிசிஐ மருத்துவ குழுவினர் அவர்களை நேரில் கவனித்து இறுதி முடிவுகளை எடுப்பார்கள்

கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் தற்போது வலைப்பயிற்சியில் பேட்டிங்கை துவங்கியுள்ளனர். அவர்கள் பிட்னஸ் பயிற்சிகளை துவங்கியுள்ளனர். பிசிசிஐ மருத்துவ குழு அவர்களுடைய முன்னேற்றத்தில் திருப்தியடைந்துள்ளது.

ரிஷப் பண்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளார். அதன் காரணமாக மீண்டும் பேட்டிங் மற்றும் வலைப்பயிற்சியில் கீப்பிங் செய்வதையும் துவங்கியுள்ளார். மேலும் தற்போது அவர் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் பின்பற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story