பாகிஸ்தான் அல்ல...தற்போது இந்தியாவின் பரம எதிரி இந்த அணி தான் - கவுதம் கம்பீர் கருத்து


பாகிஸ்தான் அல்ல...தற்போது இந்தியாவின் பரம எதிரி இந்த அணி தான் - கவுதம் கம்பீர் கருத்து
x

Image courtesy: PTI

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் கட்டாயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் கட்டாயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாகவும் விறுவிறுப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 191 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.

அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் உலக கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வென்ற இந்தியா தங்களுடைய கௌரவ சரித்திர சாதனையை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் பாகிஸ்தானை விட தற்போது ஆஸ்திரேலியா தான் இந்தியாவின் உண்மையான பரம எதிரி என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வருகிறது. இப்போது, இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்குகிறது. அதனால் பாகிஸ்தான் தற்போது இந்தியாவை தோற்கடித்தால் தான் அது ஆச்சரியமாகும். பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றால் அது சாதாரணமாகும்.

எனவே கிரிக்கெட்டின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தான் தற்போது பரம எதிரிகளாகும். ஒருவேளை நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர்களிடம் உண்மையான பரம எதிரிகள் யார் என்று கேட்டால் அது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என அவர்கள் சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story