வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!


வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 10 Jan 2024 3:42 AM GMT (Updated: 10 Jan 2024 9:53 AM GMT)

டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது,

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி விவரம்; பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

ஒருநாள் அணி விவரம்; ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், லேன்ஸ் மோரிஸ், ஜை ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஆடம் ஜாம்பா.


Next Story