ஒருநாள் கிரிக்கெட்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்..!


ஒருநாள் கிரிக்கெட்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்..!
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 10 Dec 2023 8:11 AM IST (Updated: 10 Dec 2023 8:50 AM IST)
t-max-icont-min-icon

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலை வகித்தது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி ஆட்டம் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 71 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்ட், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் மீண்டும் மழை பெய்தது. இதையடுத்து மழை நின்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 34 ஓவர்களில் 188 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 191 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.


Next Story