ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
x

image courtesy; AFP

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு;-

குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.

1 More update

Next Story