'இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்பவர் புஜாரா' - ஹர்பஜன் சிங் கருத்து


இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்பவர் புஜாரா - ஹர்பஜன் சிங் கருத்து
x

அனைத்து வீரர்களுக்கும் வரையறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெற்ற ரகானே, கோலி, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அதேவேளையில் சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் புஜாரா இடம் பெறாதது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து கூறுகையில், "டெஸ்ட் அணியில் புஜாரா இல்லை என்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர் இந்தியாவுக்கு ஒரு பெரிய வீரராக இருந்துள்ளார். அவர் நீக்கப்படவில்லை, ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறோம்.

புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். புஜாராவின் சமீபத்திய பேட்டிங் செயல்பாடுகளை வைத்து அவரை நீக்கியிருந்தால், மற்றவர்களின் பேட்டிங் சராசரியும் நன்றாக இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். அனைத்து வீரர்களுக்கும் வரையறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.



Next Story