2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்ற அணிகள் - விவரம்...!


2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்ற அணிகள் - விவரம்...!
x

Image Courtesy: ICC

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. இந்த லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையும், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரும் வரவுள்ளன. இந்நிலையில் 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதால் பாகிஸ்தான் அணியும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் தகுதிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அதை தவிர்த்து (பாகிஸ்தானை) புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.

அதன்படி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இலங்கை, நெதர்லாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களை பிடித்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறவில்லை.


Next Story