ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - திரிபுரா இடையிலான ஆட்டம் டிரா...!


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - திரிபுரா இடையிலான ஆட்டம் டிரா...!
x

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

அகர்தலா,

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் தனது 2-வது லீக் ஆட்டத்தில் திரிபுரா அணியுடன் அகர்தலாவில் மோதியது. இந்த ஆட்டத்தின் முதல் நாள் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

பனியின் தாக்கம் காரணமாக 2-வது நாள் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்திருந்தது. பாபா இந்திரஜித் 47 ரன்களுடனும் (105 பந்து, 7 பவுண்டரி), விஜய் சங்கர் 50 ரன்களுடனும் (83 பந்து, 9 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாளிலும் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக தாமதமாக தொடங்கியது. அதில் தமிழக அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.


Next Story