' நல்ல எண்ணங்கள் மட்டுமே' என்ற தலைப்பில் சைக்கிள் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட ரிஷப் பண்ட்


 நல்ல எண்ணங்கள் மட்டுமே என்ற தலைப்பில் சைக்கிள் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட ரிஷப் பண்ட்
x

image courtesy; PTI

ரிஷப் பண்ட் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவார். அதன்படி, தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ' நல்ல எண்ணங்கள் மட்டுமே' என தலைப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story