அயர்லாந்துக்கு எதிரான தொடர்; இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்...!!


அயர்லாந்துக்கு எதிரான தொடர்; இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்...!!
x

image courtesy; AFP

தினத்தந்தி 13 Aug 2023 3:22 PM IST (Updated: 13 Aug 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் பங்கேற்காத நிலையில் வழக்கமாக அவரது பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் கவனிப்பார். ஆனால் இந்த முறை லட்சுமணனும் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து தொடருக்கு தலைமை பயிற்சியாளராக உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற முன்னாள் வீரர் ஸ்டால்வார்ட் சிதான்ஷூ கோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிதான்ஷு கோடக் இந்தியா 'ஏ' அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அயர்லாந்து தொடருக்கான பந்து வீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதேலே செல்ல உள்ளார். சிதான்ஷு இரண்டு வருடங்களாக இந்தியா 'ஏ' அணிக்கு பயிற்சியளித்த அனுபவம் கொண்டவர். அயர்லாந்து தொடர் அவரை அடுத்த தலைமுறை வீரர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது.

1 More update

Next Story