ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் டக் அவுட் ஆனதற்கு இதுவே காரணம் - சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
சென்னை,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்னில் அடங்கியது.
இதையடுத்து 200 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித், கிஷன், ஐயர் ஆகியோர் 0 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து ராகுல், கோலி இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஐந்து சதங்களுடன் சில அரை சதங்களையும் அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவரது புட் வொர்க் சிறப்பாக இருந்தது.
ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆட்டத்தின் போது அவரது கால்கள் நகர்வதில் மிக தாமதம் இருந்தது. அதன் காரணமாகவே பந்தை சரியான இடத்தில் மீட் செய்ய முடியாமல் அவுட் ஆகி வெளியேறினார். இவ்வாறு அவர் கூறினார்.