ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு....!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் அணிக்கு டெம்பா பவுமாவும், டி20 அணிக்கு எய்டன் மார்க்கமும் கேப்டன்களாக நியமனம் செய்யப்படுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க டி20 அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெம்பா பவுமா, மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் பெரீரா, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், சிசாண்டா மகலா, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஸ்டம்ஸ்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டம்ப்ஸ், லிசார்ட் வில்லியம்ஸ், ரஸி வான் டெர் டுசென்.
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்சே, தப்ரைஸ் ஸ்டம்ஸ்ஸி, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ட்ரைஸ்டன் ஸ்டம்ப்ஸ், ரஸி வான் டெர் டுசென்.